/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொண்டத்துக்காளியம்மன் கோவில் புனரமைப்பு பணி விரைவில் துவக்கம்
/
கொண்டத்துக்காளியம்மன் கோவில் புனரமைப்பு பணி விரைவில் துவக்கம்
கொண்டத்துக்காளியம்மன் கோவில் புனரமைப்பு பணி விரைவில் துவக்கம்
கொண்டத்துக்காளியம்மன் கோவில் புனரமைப்பு பணி விரைவில் துவக்கம்
ADDED : பிப் 24, 2025 12:47 AM

அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் 10.34 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
பழமை வாய்ந்த இக்கோவில் முழுக்க கல்லால் கட்டப்பட்டுள்ளது. கோவிலை புனரமைப்பு செய்ய பக்தர்கள், நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்தனர். உபயதாரர், பக்தர்கள் பங்களிப்பில் புனரமைப்புக்கு அறநிலையத்துறை அனுமதி வழங்கியது.
மொத்தம், 3.60 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம், 6.34 கோடி ரூபாய் மதிப்பில் திருமாளிகை பத்தி மண்டபம், 2.42 கோடி ரூபாய் மதிப்பில் வசந்த மண்டபம், உள்ளிட்டவை அமைத்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வரும் ஏப்ரலில் நடக்கிறது
''உபயதாரர்கள், பக்தர்களுடனான ஆலோசனைக்கூட்டம் விரைவில் நடத்தப்பட்டு, கோவில் புனரமைப்பு பணி துவங்கும்'' என்கின்றனர் அதிகாரிகள்.
ஏற்கனவே கோவில் வளாகத்தில் அரசு நிதி 5.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
அன்னதான மண்டபம் கட்ட அரசு 1.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப்பணியும் விரைவில் துவங்கப்பட உள்ளது.

