/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெருவிளக்குகள் பழுது; தீப்பந்தம் ஏந்திய மக்கள்
/
தெருவிளக்குகள் பழுது; தீப்பந்தம் ஏந்திய மக்கள்
ADDED : செப் 02, 2024 12:27 AM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, 43 வது வார்டுக்கு உட்பட்டது பூச்சக்காடு. அப்பகுதியில் உள்ள வீதிகளில், தெரு விளக்கு பழுதாகி ஒரு மாதத்துக்கு மேலாகியும் சீரமைக்கப்படவில்லை.
கடந்த பல நாட்களாக அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், தெரு விளக்கு எரியாததை கண்டித்து, பொதுமக்கள் நேற்று தீப்பந்தம் ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். பூச்சக்காடு தண்ணீர் தொட்டி அருகே, தீப்பந்தங்களை கையில் ஏந்தி, மெழுகுவர்த்தி மற்றும் மொபைல் போனில் டார்ச் லைட் அடித்தபடியும் நின்று பொதுமக்கள் போராடினர்; தெரு விளக்கு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணாத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர்.