/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒட்டுக்குளத்தில் மதகு பழுது: வீணாகும் பாசன நீர்
/
ஒட்டுக்குளத்தில் மதகு பழுது: வீணாகும் பாசன நீர்
ADDED : பிப் 28, 2025 11:29 PM

உடுமலை; உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி தளி வாய்க்கால் வாயிலாக, ஏழு குளம் பாசனத்தின் கீழ், 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், சுற்றுப்புற கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளன.
ஏழு குளத்தில் ஒவ்வொரு குளமாக நிரம்பி, இறுதியாக உடுமலை நகருக்கு அருகே அமைந்துள்ள ஒட்டுக்குளத்திற்கு வருகிறது. ஒட்டுக்குளத்தில், தற்போது, மொத்தமுள்ள, 10 அடி நீர்மட்டத்தில், 6.20 அடி நீர்மட்டம் உள்ளது.
இந்நிலையில், ஒட்டுக்குளத்திலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் மதகு பழுது காரணமாக, அதிகளவு நீர் வெளியேறி வருகிறது. கோடை காலத்தில், பாசன நிலங்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், நீர் வீணாவதை தடுக்க வேண்டும். மேலும் கரைகளில், செடி, கொடிகள் முளைத்து, புதர் மண்டி காணப்படுவதோடு, மது அருந்தும் மையமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
எனவே, மதகு பழுதை சரி செய்யவும், புதர்களை அகற்றி, குளக்கரையை பலப்படுத்தவும் வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.