/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடையிலும் வீணாகும் குடிநீர்;உடைந்த குழாய் சீரமைக்கலாமே!
/
கோடையிலும் வீணாகும் குடிநீர்;உடைந்த குழாய் சீரமைக்கலாமே!
கோடையிலும் வீணாகும் குடிநீர்;உடைந்த குழாய் சீரமைக்கலாமே!
கோடையிலும் வீணாகும் குடிநீர்;உடைந்த குழாய் சீரமைக்கலாமே!
ADDED : மே 11, 2024 12:25 AM

திருப்பூர்;குடிநீர் குழாய் உடைப்புகள் சரி செய்யப்படாமல் உள்ளதால், பல்வேறு இடங்களில் குடிநீர் வீணாக ரோட்டில் சென்று பாய்கிறது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய்கள்; குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் சப்ளை குழாய்கள் ஆகியன ரோட்டில் குழி தோண்டிப் பதிக்கப்பட்டுள்ளது.
இக்குழாய்கள் பல இடங்களில் சிறிதும், பெரிதுமாக உடைப்பு ஏற்படுவது சகஜமாக உள்ளது. இவற்றிலிருந்து வெளியேறும் குடிநீர் ரோட்டில் சென்று தேங்கி நிற்கிறது. இதனால்,ரோடுகள் சேதமடைகிறது. வாகனப் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக உள்ளது.
நிரந்தரமான அல்லது நீண்ட காலமாக உடைப்புகள் ஏற்பட்டுள்ள இடங்களில் குடிநீர் வெளியேறும் இடத்திலிருந்து அருகேயுள்ள வடிகால்களுக்கு சென்று சேரும் விதமாக 'வாய்க்கால்' அமைப்பையும் அந்தப் பகுதியினர் செய்துள்ளனர்.
இதனால், ரோடு சேதமடைவது தவிர்க்கப்பட்டாலும் குடிநீர் வீணாவது தொடர்கதையாக உள்ளது. கோடைக் காலத்தில், குடிநீர் கிடைக்காமல் பல இடங்களிலும் மக்கள் அவதிக்கும், தவிப்புக்கும் ஆளாகியுள்ள நிலையில், குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வீணாகும் செயல் தடுக்கப்பட வேண்டும்.