ADDED : ஜூலை 21, 2024 11:32 PM

கட்டட கட்டுமான தொழிலாளர் சங்க தெற்கு தாலுகா மாநாடு, பி.ஆர்., நிலையத்தில் நேற்று நடந்தது. துணை தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் ஜோதி, அஞ்சலி தீர்மானம் வாசித்தார். பொருளாளர் செல்வகுமார் வரவேற்றார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் மூர்த்தி, கோரிக்கைகளை விளக்கி பேசினார். தலைவராக பொம்முதுரை, செயலாளராக ரமேஷ்குமார், பொருளாளராக செல்வகுமார் உள்ளிட்டோர் தேர்வாயினர்.
கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு, 55 வயது முதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும். கட்டுமான தொழிலாளர் ஓய்வூதிய தொகையை, மூவாயிரம் ரூபாயாக உயர்த்தவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயபால் வாழ்த்தி பேசினார். கட்டுமான சங்க மாநில பொதுச்செயலாளர் குமார் நன்றி கூறினார்.
----
கட்டட கட்டுமான தொழிலாளர் சங்க தெற்கு தாலுகா மாநாட்டில், தாலுகா செயலாளர் ரமேஷ் பேசினார். அருகில், மாவட்ட தலைவர் மூர்த்தி உள்ளிட்டோர்.