ADDED : மார் 11, 2025 05:05 AM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சி சார்பில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், தொழில் வரி, காலியிட வரி, குத்தகை மற்றும் வாடகை இனங்கள் வசூலிக்கப்படுகிறது.
இந்த வரியினங்கள் நடப்பு நிதியாண்டு முடிவுக்குள் நிலுவையின்றி செலுத்தி, மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொத்து உரிமையாளர் மற்றும் வரி செலுத்துவோர் உதவ வேண்டும்.வரி செலுத்துவோர் வசதிக்காக மைய அலுவலகம், அனைத்து மண்டல அலுவலகம் மற்றும் கணிணி வரி வசூல் மையங்கள் வாரத்தில் அனைத்து நாட்களிலும் காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை இயங்கும்.
வரி வசூல் மையங்களில் பணம் அல்லது காசோலை வாயிலாகவும், ஆன் லைன் நேரடியாக வங்கி கணக்கிலும், ஜி பே, பே டிஎம் மற்றும் போன் பே செயலிகள் வாயிலாகவும் செலுத்தலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.