ADDED : மார் 07, 2025 10:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்டில், பயணியர் நிற்குமிடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அங்கு திருப்பூர் பஸ்கள் நிற்குமிடத்தில் பயணியர் காத்திருப்பதற்கான இடம் உள்ளது. இங்கு சிறிய தற்காலிக கடைகள் போடப்படுகின்றன. எனவே, பயணியருக்கு இடையூறாக போடப்படும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.