/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களில் தெருநாய் தொல்லை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
கிராமங்களில் தெருநாய் தொல்லை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கிராமங்களில் தெருநாய் தொல்லை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கிராமங்களில் தெருநாய் தொல்லை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : டிச 27, 2024 10:52 PM
உடுமலை, ; உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் தெருநாய்களை கட்டுபடுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றியத்தில் உள்ள, கிராமப்பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் நிம்மதி இழந்து வருகின்றனர். ஒவ்வொரு வீதியிலும் பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் வலம் வருகின்றன.
கடந்த மூன்று மாதங்களாக பல பகுதிகளில் நாய் குட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாய் குட்டிகள் ரோட்டின் குறுக்கே படுத்துக்கொண்டிருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அவற்றை அறியாமல் செல்லும்போது, அருகில் வந்தவுடன் வாகனத்தை நிறுத்த தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
தெருநாய்களும் வீடுகளின் முன் நிற்கும் வாகனங்களை அசுத்தம் செய்து, கூட்டம் கூடி வாகன ஓட்டுநர்கள் துரத்துவதுமாகவும் இருப்பதால், பொதுமக்கள் அச்சத்துடன் வெளியில் சென்று வர வேண்டியுள்ளது.
குழந்தைகளை வெளியில் அழைத்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இரவு முழுவதும் தெருநாய்கள் கூட்டமாக சண்டையிட்டு கொள்வதால், மக்கள் உறக்கமின்றி அவதிப்படுகின்றனர்.
மேலும், குப்பை சேகரிக்க துாய்மை காவலர்கள் வரும் முன்பாக, குப்பை உள்ளிட்ட கழிவுகளை ரோடு முழுவதும் நாய்கள் பரப்பி விடுகின்றன. இதனால், பொதுச்சுகாதாரமும் பாதிக்கிறது.
இதுகுறித்து, பொதுமக்கள் அந்தந்த கிராமங்களில் ஊராட்சி பிரதிநிதிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஊராட்சிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்த, அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

