/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரவுடிகளுக்கு காத்திருக்குது 'காப்பு'; களமிறங்கிய கமிஷனர்: 3 தனிப்படை அமைப்பு
/
ரவுடிகளுக்கு காத்திருக்குது 'காப்பு'; களமிறங்கிய கமிஷனர்: 3 தனிப்படை அமைப்பு
ரவுடிகளுக்கு காத்திருக்குது 'காப்பு'; களமிறங்கிய கமிஷனர்: 3 தனிப்படை அமைப்பு
ரவுடிகளுக்கு காத்திருக்குது 'காப்பு'; களமிறங்கிய கமிஷனர்: 3 தனிப்படை அமைப்பு
ADDED : ஆக 06, 2024 11:31 PM

திருப்பூர் : திருப்பூருக்கு பொறுப்பேற்றுள்ள போலீஸ் கமிஷனர், முதல் கட்டமாக, ரவுடிகளை ஒடுக்க, குற்றங்களை தடுக்கும் வகையில், மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளார்.
திருப்பூர் போலீஸ் கமிஷனராக லட்சுமி நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இவர் பணியாற்றிய இடங்களில் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து மக்களிடம் பாராட்டு பெற்றுள்ளார். அதனை நிரூபிக்கும் வகையில், திருப்பூரில் பொறுப்பேற்ற உடன், குற்றங்கள் நடந்த பின் நடவடிக்கை எடுப்பதை காட்டிலும், நடக்காமல் முன்கூட்டியே தடுக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கையை எடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.
முதல் நாள் துணை கமிஷனர், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் கமிஷனர் லட்சுமியை சந்தித்தனர். நகரின் நிலவரங்களை கேட்ட அவர், ஸ்டேஷன் பற்றாக்குறை, சட்டம்-ஒழுங்கு, குற்றங்கள் நிலவரம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். தொடர்ந்து, அடுத்தடுத்த கூட்டங்களில், நகருக்கு தேவையான நடவடிக்கை குறித்து கலந்து ஆலோசிக்கலாம் என்று தெரிவித்தார்.
தனிப்படை அமைப்பு
நேற்று மாநகரில் எவ்வித குற்றசம்பவங்கள் நடக்காமல் இருக்க, ஒவ்வொன்றையும் கண்காணிக்கும் வகையில், எஸ்.ஐ., தலைமையில், மூன்று தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதில், குற்றப்பிரிவுக்கு, சட்டவிரோத செயல்களை கண்டறியும் வகையில், குற்றங்கள் நடந்தால் கண்டுபிடிக்க என, மூன்று தனிப்படைகளை அமைத்து முதல்கட்டமான அதிரடி நடவடிக்கையை துவக்கியுள்ளார்.
போலீசார் கூறியதாவது:
கமிஷனர், மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளார். ஒவ்வொரு பிரிவிலும், எஸ்.ஐ., தலைமையில், ஐந்து போலீசார் இடம் பெற்றுள்ளனர். கிரைம் டீம், கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை கண்காணித்தும், அதனை தடுக்கும் வகையிலும் மற்றும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வெளியில் உள்ள ரவுடிகள், பழைய குற்றவாளிகளை கண்காணிக்கவும் என, மூன்று தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் சரியாக வேலை செய்ய வேண்டும். எவ்வித குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக கூடாது. போலீசார் தங்களின் நடவடிக்கை சொல்லில் இருக்க கூடாது, செயலில் இருக்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.