/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாயமான சிறுமியர் சிவகங்கையில் மீட்பு 2 வாலிபர் கைது
/
மாயமான சிறுமியர் சிவகங்கையில் மீட்பு 2 வாலிபர் கைது
மாயமான சிறுமியர் சிவகங்கையில் மீட்பு 2 வாலிபர் கைது
மாயமான சிறுமியர் சிவகங்கையில் மீட்பு 2 வாலிபர் கைது
ADDED : ஜூலை 16, 2024 10:47 PM
திருப்பூர்;திருப்பூரில், மாயமான, மூன்று சிறுமிகளை சிவகங்கையில் போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக, வாலிபர் இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரை அடுத்த சாமளாபுரத்தை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. இவரது தங்கை, 13 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியின் தோழி என, மூன்று பேரும் நேற்று முன்தினம் மாயமனார்கள். புகாரின் பேரில், மங்கலம் போலீசார் விசாரித்தனர். வீட்டில் கிடைத்த கடிதத்தில், 'நாங்கள் வேலைக்காக சென்னை செல்கிறோம். தீபாவளிக்கு வருவோம். யாரும் தேட வேண்டாம். எல்லாரும் மன்னிச்சிடுங்க,' என்று எழுதி இருந்தது.
இதனால், மங்கலம் தனிப்படை போலீசார் அனைத்து ஸ்டேஷன்களுக்கு தகவல் கொடுத்து, மூன்று பேரையும் தேடி வந்த நிலையில், மாயமான, சிறுமிகள் சிவகங்கையில் இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், சிறுமிகளை மீட்டு விசாரித்தனர்.
காதலனை பார்க்க...
மாயமான மூன்று பேரில், 15 வயது சிறுமிக்கு, திருப்பூரில் வேலை பார்த்து வந்த சிவகங்கையை சேர்ந்த வாலிபருடன் பழகி வந்துள்ளார். அவர், பணி மாறுதல் பெற்று, சிவகங்கை சென்றார். இதில், 15 வயது சிறுமியின் தோழியான இன்னொவருக்கும், வாலிபரின் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டது. இரு சிறுமிகளும், இன்ஸ்டாகிராமில், மூலம் வாலிபர்களுடன் பேசி பழகி வந்தனர். தங்கள் காதலனை பார்க்க சிவகங்கைக்கு மூன்று பேரும் சென்றது தெரிந்தது.
இதுதொடர்பாக, சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி சிவகங்கைக்கு அழைத்து சென்ற கார்த்திக், 24 மற்றும் மதுரையை சேர்ந்த சந்தரு, 20 ஆகியோரை மங்கலம் போலீசார் கைது செய்தனர்.