/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகரிக்க துவங்கும் வெயில்; ஆராய்ச்சி மையம் தகவல்
/
அதிகரிக்க துவங்கும் வெயில்; ஆராய்ச்சி மையம் தகவல்
ADDED : மார் 06, 2025 06:24 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியிருக்கிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில், திருப்பூர் மாவட்டத்தின் வாராந்திர அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.அதன்படி, இந்த வாரம், அதிகபட்ச வெப்ப நிலை, 34 முதல், 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை, 24 முதல், 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். காலை நேரத்தில் காற்றின் ஈரப்பதம், 84 சதவீதம்; மாலை நேர காற்றின் ஈரப்பதம், 40 சதவீதம் வரை பதிவாக வாய்ப்புள்ளது. சராசரியாக மணிக்கு, 6 முதல், 12 கி.மீ.,வேகத்தில் காற்று வீசும்.
மேற்கு மண்டலத்தில் வறண்ட வானிலையே எதிர்பார்க்கப்படுகிறது. நிலத்தில் வறட்சி ஏற்படுவதை தவிர்க்கவும், பாய்ச்சப்படும் நீர் ஆவியாவதை தவிர்க்கவும், இலை, தழைகளால் நிலப்போர்வையிட வேண்டும்.
கோடையில், நிலக்கடலையில் வேர் அழுகல் நோய் ஏற்படுவதை தவிர்க்க, 'டிரைக்கோடெர்மா விரிடியை' 2.5 கிலோ வீதம், எக்டருக்கு, 300 கிலோ எருவுடன் கலந்து இட வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.