/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கார்பன் ஆலைக்கு எதிர்ப்பு; மக்கள் தொடர் போராட்டம்
/
கார்பன் ஆலைக்கு எதிர்ப்பு; மக்கள் தொடர் போராட்டம்
ADDED : ஜூலை 04, 2024 05:23 AM

திருப்பூர் : தாராபுரம், பொன்னாபுரம் கிராமத்தில் கார்பன் ஆலை (தேங்காய் கரிதொட்டி) அமைப்பதற்கு, ஊராட்சி நிர்வாகம் அனுமதி கொடுத்தது. இதற்கு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இச்சூழலில், ஆலைக்கு அனுமதி கொடுக்க கூடாது என வலியுறுத்தி, ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற தாராபுரம் போலீசார் பல்வேறு கட்ட பேச்சு நடத்தியும், கலைந்து செல்ல மறுத்தனர். ஆலை அமைப்பதற்கு கொடுத்த கட்டட அனுமதியை ரத்து செய்தால் மட்டுமே போராட்டத்தை திரும்ப பெறுவோம் என வலியுறுத்தினர். மாலை வரை போராட்டம் தொடர்ந்து நடந்தது.