/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யல் பாலம் பணி மீண்டும் துவக்கம்
/
நொய்யல் பாலம் பணி மீண்டும் துவக்கம்
ADDED : மே 31, 2024 01:29 AM

திருப்பூர்:திருப்பூர், ஈஸ்வரன் கோவில் அருகே, நொய்யல் ஆற்றின் மீது புதிய பாலம் கட்டும் பணி துவங்கி நடக்கிறது.
நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாடு நிதியில் அமையும் இந்த பாலம், கட்டுமானத்துக்காக நொய்யல் ஆற்றில் துாண்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிக்காக ஆற்றில் வரும் நீரை ஒரு புறத்தில் தடுத்து, திருப்பி விட்டு பணி நடந்து வந்தது.
கோவை மற்றும் திருப்பூர் சுற்றுப்பகுதியில் பெய்த கோடை மழையால், நொய்யலில் நீர் வரத்து அதிகரித்தது. பாலம் கட்டுமானம் நடந்து வரும் இடத்தில் அதிகளவில் தண்ணீர் கடந்து சென்றது. இதனால், அங்கு கட்டுமானப் பணி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கடந்த இரு நாட்களாக ஆற்றில் நீர் வரத்து மெல்ல மெல்லக் குறைந்தது. இதையடுத்து நிறுத்தப்பட்ட கட்டுமானப் பணி மீண்டும் துவங்கியது. வெள்ளத்தில் தாறுமாறாக சிதறிக் கிடந்த பொருட்களை சீர் செய்து, கட்டுமானம் துவங்குவதற்கான முன்னேற்பாடுகளை தொழிலாளர்கள் நேற்று மேற்கொண்டனர்.