/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவமனையுடன் இணைந்த ரேவதி நர்சிங் கல்வி நிறுவனம்
/
மருத்துவமனையுடன் இணைந்த ரேவதி நர்சிங் கல்வி நிறுவனம்
மருத்துவமனையுடன் இணைந்த ரேவதி நர்சிங் கல்வி நிறுவனம்
மருத்துவமனையுடன் இணைந்த ரேவதி நர்சிங் கல்வி நிறுவனம்
ADDED : மே 11, 2024 12:26 AM
திருப்பூர்:''மருத்துவமனை யுடன் இணைந்த கல்வி நிறுவனமாக இருப்பதால், நிறைவான பயிற்சியுடன், மருத்துவப்படிப்பை நிறைவு செய்ய முடியும்'' என, ரேவதி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி கூறினார்.
இது குறித்து மேலும், அவர் கூறியதாவது:
ரேவதி கல்வி நிறுவனங்கள், அவிநாசி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கணிணி பேருந்து நிறுத்தம் அருகே, 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில், செவிலியர் கல்லுாரி, பிசியோதெரபி மற்றும் ஆக்குபேஷனல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. எம்.எஸ்.சி., நர்சிங் மற்றும் முதுகலை மருத்துவமனை நிர்வாகம் (எம்.எச்.ஏ.,) படிப்புகள் உள்ளன.
மத்திய, மாநில அரசுகளின் அனுமதி; டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலை., அனுமதியுடன் கல்வி நிறுவனம் செயல்படுகிறது. தற்போதைய சூழலில், மருத்துவத்துறை சார்ந்த படிப்புகள் தான், 100 சதவீதம் வேலை வாய்ப்பை உறுதிப் படுத்துகிறது. 4 ஆண்டு படிப்பு முடித்ததும், வேலைக்கு உத்தரவாதம் உண்டு. வெளிநாடுகளிலும், அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
பொதுவாக செவி லியர் கல்லுாரி என்றாலே, மருத்துவமனையுடன் இணைந்து இருக்காது. மருத்துவமனையும், செவிலியர் கல்லுாரி யுடன் இணைந்து இருக்காது. ஆனால், ரேவதி கல்வி நிறுவனங்கள், 10 கி.மீ., தொலைவில் உள்ள, ரேவதி மெடிக்கல் சென்டரின் ஒரு அங்கமாக உள்ளது. 24 மணி நேரம் செயல்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பயிற்சி பெறும் வாய்ப்பு, உண்டு.
இவ்வாறு, அவர் கூறினார்.