
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர், அம்மாபாளையத்தை சேர்ந்தவர் காயத்ரி, 24. கடந்த 30ம் தேதி டூவீலரில் சென்றபோது, பின்தொடர்ந்த நபர், காயத்ரி அணிந்திருந்த இரண்டு சவரன் நகையை பறித்து தப்பி சென்றார்.
திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்தனர். முதல் நிலை காவலர்கள் பார்த்திபன், பாண்டீஸ்வரன் ஆகியோர் 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டு விசாரித்தனர். துரிதமாக செயல்பட்டு, 10 மணி நேரத்துக்குள் வழக்கில் தொடர்புடைய சபரிநாதன், 22, செந்தில்குமார், 42 என, இருவரை கைது செய்தனர்.
வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய உறுதுணையாக இருந்த பார்த்திபன், பாண்டீஸ்வரன் ஆகியோரை, திருப்பூர் போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பவானீஸ்வரி வெகுமதி வழங்கி பாராட்டினார்.