/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிக்னல் இல்லாததால் சிக்கல் நால் ரோட்டில் விபத்து அபாயம்
/
சிக்னல் இல்லாததால் சிக்கல் நால் ரோட்டில் விபத்து அபாயம்
சிக்னல் இல்லாததால் சிக்கல் நால் ரோட்டில் விபத்து அபாயம்
சிக்னல் இல்லாததால் சிக்கல் நால் ரோட்டில் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 14, 2024 12:54 AM

பல்லடம்;பல்லடம் நால் ரோட்டின் ஒரு பகுதியில் மட்டும் சிக்னல் இல்லாததால் ஏற்படும் குழப்பம் காரணமாக, வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
பல்லடம் - பொள்ளாச்சி ரோட்டில், வாகனங்கள் செல்ல இடையூறாக இருந்த குறுகலான தரைமட்ட பாலம் இடித்து அகற்றப்பட்டு, புதிய பாலம் கட்டப்பட்டது.
பணிகள் முடிந்து சமீபத்தில், ரோடு பயன்பாட்டுக்கு விடப்பட்டது. தரைமட்ட பாலம் கட்டுமான பணி காரணமாக, இங்கிருந்த சிக்னல் கம்பங்களும் அகற்றப்பட்டன. தற்போது, பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிக்னல் இல்லாததால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
வாகன ஓட்டிகள் கூறியதாவது:
பல்லடம், -அவிநாசி ரோட்டில் இருந்து, கோவை மற்றும் பொள்ளாச்சி செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கான சிக்னல் இல்லை. இதன் காரணமாக, எப்போது செல்வது, நிற்பது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் பலர் குழப்பம் அடைகின்றனர்.
மேலும், சிக்கலின் இதர திசைகளில் இருந்து வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. நால் ரோடு பகுதி வாகன போக்குவரத்து நிறைந்த இடம் என்பதால், அகற்றப்பட்ட சிக்னல் கம்பத்தை விரைவாக பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.