/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோடு கீழே... 'சிலாப்' மேலே; அந்தரத்தில் பறக்கும் வாகனங்கள்
/
ரோடு கீழே... 'சிலாப்' மேலே; அந்தரத்தில் பறக்கும் வாகனங்கள்
ரோடு கீழே... 'சிலாப்' மேலே; அந்தரத்தில் பறக்கும் வாகனங்கள்
ரோடு கீழே... 'சிலாப்' மேலே; அந்தரத்தில் பறக்கும் வாகனங்கள்
ADDED : மார் 10, 2025 12:43 AM

பல்லடம்; பல்லடம், திருப்பூர் ரோட்டில், தனியார் குழாய் பதிக்கும் பணி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.
குழாய் பதிப்பு பணி நிறைவடைந்து, தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்ட நிலையில், குழாய்களை இணைக்க மகாலட்சுமி நகர் அருகே 'ஜங்ஷன்' அமைக்கப்பட்டு சிமென்ட் 'சிலாப்' மூடி பொருத்தப்பட்டது.
இந்த சிலாப், ரோடு மட்டத்துக்கு மேல் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக வரும் வாகனங்கள், சிலாப் இருப்பது தெரியாமல் தடுமாறி செல்கின்றனர். குறிப்பாக, வாகனங்கள் இவ்வழியாக வேகமாக வந்து செல்வதால், இரவு நேரங்களில், சிலாப் இருப்பது தெரியாமல் இதன் மீது ஏறி செல்லும் வாகனங்கள் துாக்கி எறியப்படுகின்றன. இது விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.
போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலை என்பதால், குழாய் பதிப்பு பணிக்காக அமைக்கப்பட்ட இந்த 'சிலாப்'பை ரோடு மட்டத்துக்கு இணையாகவோ அல்லது ரோட்டோரத்திலோ அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டி களின் எதிர்பார்ப்பு.