ADDED : ஆக 22, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் அடுத்த கணியாம்பூண்டியில் ஏராளமான வீடுகள், வணிக நிறுவனங்கள், கடைகள் என உள்ளது.
அப்பகுதியில் பிரதான ரோட்டில் நான்கு புறமும் கழிவு நீர் ரோட்டில் சென்று வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ரோட்டில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து குளம் போல் தேங்கி நிற்கின்றது.
பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இச்சூழலில், இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவிநாசி தாலுகா அலுவலகம் மற்றும் கணியாம்பூண்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.