sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரோடு விரிவாக்கம்; தற்காலிக ஆக்கிரமிப்புக்கா? வாகன ஓட்டுநர்கள் வேதனை

/

ரோடு விரிவாக்கம்; தற்காலிக ஆக்கிரமிப்புக்கா? வாகன ஓட்டுநர்கள் வேதனை

ரோடு விரிவாக்கம்; தற்காலிக ஆக்கிரமிப்புக்கா? வாகன ஓட்டுநர்கள் வேதனை

ரோடு விரிவாக்கம்; தற்காலிக ஆக்கிரமிப்புக்கா? வாகன ஓட்டுநர்கள் வேதனை


ADDED : ஜூன் 24, 2024 10:49 PM

Google News

ADDED : ஜூன் 24, 2024 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில், ஆக்கிரமிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக, வாகன ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலை, நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது.

நகரில், மாரியம்மன் கோவில் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் பிரிந்து, ஏரிப்பாளையம் வரை, இந்த மாநில நெடுஞ்சாலை, நகரப்பகுதி வழியாக செல்கிறது. இந்நிலையில், ரோடு சந்திப்பில் இருந்து, ஏரிப்பாளையம் வரை, மாநில நெடுஞ்சாலை குறுகலாக இருந்ததால், தொடர் விபத்துகள் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன், 10 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகில், புதிதாக இரண்டு பாலங்கள் கட்டப்பட்டு, மழை நீர் வடிகாலுக்கு தடுப்பு கட்டி, ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது.

இவ்வாறு, பல கோடி ரூபாய் அரசு நிதியில், மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும் சில நாட்கள் மட்டுமே வாகன ஓட்டுநர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.

பின்னர் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில், படிப்படியாக தள்ளு வண்டி கடைகள் உட்பட தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க துவங்கின.

தற்போது, ஏரிப்பாளையம் சந்திப்பு முதல் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு வரை, ரோட்டின் ஒரு பகுதி முழுவதும், வரிசையாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், மாநில நெடுஞ்சாலையில், வழக்கம் போல், நெரிசல் அதிகரித்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

ரோட்டோர கடைகளுக்கு வரும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், இரவு நேரங்களில், நெரிசல் அதிகரித்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறையினரும், இந்த ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல், அலட்சியமாக உள்ளனர். பல கோடி ரூபாய் அரசு நிதியில், விரிவாக்கப்பட்ட ரோடு, அதிகாரிகள் அலட்சியத்தால், ஒற்றையடிப்பாதையாக மாறியும், நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல், செஞ்சேரிமலை ரோடு சந்திப்பு விரிவாக்க திட்டமும் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us