/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருப்புக்கொடி ஏந்திய சாலைப்பணியாளர்கள்
/
கருப்புக்கொடி ஏந்திய சாலைப்பணியாளர்கள்
ADDED : ஜூன் 11, 2024 12:33 AM

திருப்பூர்;'சாலைப்பணியாளர் களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்குரிய ஊதிய மாற்றம், தர ஊதியம் வழங்கிட வேண்டும், சாலை பணியாளர், சாலை ஆய்வாளர் பணியிடம் ஒழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்,' என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், ஆர்ப் பாட்டம் நடந்தது.
திருப்பூர், காலேஜ் ரோடு, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கோட்ட தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் சிவக்குமாரன், அம்மாசை முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பாலசுப்ரமணியன், கோட்ட செயலாளர் ராமன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி சிறப்புரை ஆற்றினர்.