/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துவங்காத சாலைப்பணி ஆக்கிரமிப்பு மாயமாகுமா?
/
துவங்காத சாலைப்பணி ஆக்கிரமிப்பு மாயமாகுமா?
ADDED : ஜூலை 12, 2024 11:53 PM
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டலம் 18வது வார்டுக்கு உட்பட்டது எம்.எஸ்., நகர் மெயின் ரோடு. இப்பகுதியில், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் புதிய ரோடு போட திட்டமிடப்பட்டுள்ளது.
ரோட்டில் பல இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் பெருமளவு உள்ளன. ஆக்கிரமிப்பு அகற்றினால் மட்டுமே புதிய ரோடு போடும் பணி மேற்கொள்ளப்படும் நிலை உள்ளது. நிதி ஒதுக்கி, பணி உத்தரவு வழங்கியும் பணி துவங்கப்படவில்லை.
உரிய ஆவணங்களுடன் மாநகராட்சி மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். மேயர் தினேஷ்குமார், மண்டல குழு தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர், ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். ஆக்கிரமிப்புகள் அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

