/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.100 கோடி மதிப்பு கோவில் நிலம் அறநிலையத்துறை அதிரடி மீட்பு
/
ரூ.100 கோடி மதிப்பு கோவில் நிலம் அறநிலையத்துறை அதிரடி மீட்பு
ரூ.100 கோடி மதிப்பு கோவில் நிலம் அறநிலையத்துறை அதிரடி மீட்பு
ரூ.100 கோடி மதிப்பு கோவில் நிலம் அறநிலையத்துறை அதிரடி மீட்பு
ADDED : ஆக 05, 2024 10:47 PM

திருப்பூர்:திருப்பூர் அருகே, அழகாபுரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, 21.59 ஏக்கர் நிலம் நேற்று மீட்கப்பட்டது.
திருப்பூர் தெற்கு தாலுகாவுக்குட்பட்டது அலகுமலை கிராமம். அங்குள்ள அழகாபுரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலம், 16.84 ஏக்கர்; முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலுக்குச் சொந்தமான 4.75 ஏக்கர் என மொத்தம், 21.59 ஏக்கர் நிலம் நேற்று மீட்கப்பட்டது.
ஹிந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹர்சினி தலைமையில், கோவில் நிலம் தனி தாசில்தார் ரவீந்திரன், செயல் அலுவலர் சரவணபவன், கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலையில், நிலம் சுவாதீனம் எடுக்கப்பட்டது.
அந்த இடத்தில், கோவில் நிலம் என அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட, 21.59 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 100 கோடி ரூபாய் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.