/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புகையிலைப் பொருள் விற்பனை: ரூ.13 லட்சம் அபராதம்
/
புகையிலைப் பொருள் விற்பனை: ரூ.13 லட்சம் அபராதம்
ADDED : மார் 04, 2025 10:29 PM
- நமது நிருபர் -
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள், போலீசார், உள்ளாட்சி துறை அதிகாரிகள், மாவட்டத்தில் பள்ளி அருகே உள்ள பெட்டிக்கடைகள், டாஸ்மாக் பார் கடைகள் மற்றும் பார் சுற்றுப்பகுதி பெட்டிக் கடைகள், மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பத்து நாட்கள் நடத்திய ஆய்வில், ரோட்டோர பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த தனிநபர் 17 பேர் மற்றும் 23 கடைகள் சிக்கின; 23 கடைகளும் மூடப்பட்டுள்ளன.
தனிநபர், கடைகள் மொத்தம் 32 பேருக்கு, முதல்முறை குற்றத்துக்காக தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 8 லட்சம் ரூபாய்; 6 பேருக்கு இரண்டாவது முறை குற்றத்துக்காக தலா 50 ஆயிரம் வீதம், 3 லட்சம் ரூபாய்; 2 கடைகளுக்கு மூன்றாவது முறை குற்றத்துக்காக தலா ஒரு லட்சம் வீதம், 2 லட்சம் ரூபாய் என, மொத்தம் 13 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், 94440 42322 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் வாயிலாக தெரிவிக்கலாம்.