/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கிக்கணக்கில் இருந்த ரூ.6 லட்சம் சுருட்டல்; 'சைபர்' கும்பல் கைவரிசை
/
வங்கிக்கணக்கில் இருந்த ரூ.6 லட்சம் சுருட்டல்; 'சைபர்' கும்பல் கைவரிசை
வங்கிக்கணக்கில் இருந்த ரூ.6 லட்சம் சுருட்டல்; 'சைபர்' கும்பல் கைவரிசை
வங்கிக்கணக்கில் இருந்த ரூ.6 லட்சம் சுருட்டல்; 'சைபர்' கும்பல் கைவரிசை
ADDED : பிப் 10, 2025 11:50 PM
திருப்பூர்; திருப்பூரில் வாடிக்கையாளருக்கு வந்த போலி வங்கி செயலி மூலமாக, ஆறு லட்சம் ரூபாயை 'சைபர்' கும்பல் ஏமாற்றியது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூரை சேர்ந்தவர் ரமேஷ்குமார், 48. இவரது மொபைல் போன் எண்ணுக்கு சமீபத்தில் 'இண்டஸ்இண்ட்' வங்கி பெயரில், இ-கே.ஒய்.சி., என ஏ.பி.கே., பைல் வந்தது. வங்கி கணக்கு விபரங்களை பதிவு செய்ய வில்லையென்றால், கணக்கு முடக்கப்படும் என்று நினைத்து, ஏ.பி.கே., பைலை திறந்து, செயலியை பதிவிறக்கம் செய்தார். சில நாட்கள் கழித்து வங்கியிலிருந்து தொடர்ந்து பணம் எடுக்கப்பட்டது தொடர்பாக எஸ்.எம்.எஸ்., வந்தது.
அவர் வங்கி கணக்கை சோதனை செய்து பார்த்தார். அதில், ஆறு லட்சத்து, ஆயிரம் ரூபாய், பல்வேறு பரிவர்த்தணைகளில் பணம் எடுக்கப்பட்டது தெரிந்தது. மேலும், அவரது வங்கி கூட்டுக் கணக்கை பார்த்த போது, அதிலிருந்து, 4 ஆயிரத்து, 500 ரூபாய் எடுக்கப்பட்டது தெரிந்தது. புகாரின் பேரில், திருப்பூர் மாநகர 'சைபர்' கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்ட 'சைபர்' போலீசார் கூறுகையில், 'சமீபகாலமாக வங்கியிருந்து, போலீசார் அபராதம் விதித்துள்ளது போன்ற பெயரில் போலியாக ஏ.பி.கே., பைலை மோசடி கும்பலால் அனுப்பப்பட்டு, அதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கின்றனர். எந்தவொரு ஏ.பி.கே., பைல் வந்தாலும், அதை பதிவிறக்கம் செய்யாமல் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்,' என்றார்.