/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கி கணக்கில் ரூ.9.50 லட்சம் 'அபேஸ்'
/
வங்கி கணக்கில் ரூ.9.50 லட்சம் 'அபேஸ்'
ADDED : மார் 05, 2025 03:46 AM
திருப்பூர்:திருப்பூர், பி.என்., ரோட்டை சேர்ந்த, 35 வயது மதிக்கதக்க நபருக்கு கடந்த, 20ம் தேதி தனியார் வங்கி லோகோவுடன் கூடிய 'வாட்ஸ்அப்'பில் தகவல் ஒன்று வந்தது. அதில், அரசு ஆவணங்களில் உள்ள விவரங்கள் நிலுவையில் உள்ளதாகவும், அதனை மேம்படுத்த நாங்கள் அனுப்பும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் அனுப்பி கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருந்தது.
இதனை நம்பிய அவர், 'ஆன்லைனில்' பூர்த்தி செய்ய முயன்றும் முடியவில்லை. ஆனால், அவரின் வங்கி கணக்கிலிருந்து, மூன்று தவணைகளாக, 9.50 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதிர்ச்சியடைந்த அவர், 'சைபர்' கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.