/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடு பழுது பார்ப்பு, கனவு இல்லம் 3,551 பயனாளிகளுக்கு ரூ.74.66 கோடி ஒதுக்கீடு

ADDED : ஆக 23, 2024 12:33 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கனவு இல்லம் மற்றும் வீடு பழுது பார்க்கும் திட்டங்களில், 3,551 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; மொத்தம் 74.66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யது, பணிகளை துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரகப்பகுதிகளில் குடிசை வீடுகளில் வசிப்போருக்கு, பாதுகாப்பான கான்கிரீட் வீடு கட்டித்தரும் வகையில், கனவு இல்லம் திட்டம்; பழுதடைந்த வீடுகளை பழுதுபார்க்கும் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்திவருகிறது.
இவ்விரு திட்டங்களிலும் ஊரக பகுதிகளில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, புதிய வீடு கட்டுதல், பழுது பார்த்தலுக்கான ஆணை வழங்கப்பட்டுவருகிறது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
2024 - 25ம் நிதியாண்டில், கனவு இல்லம் திட்டத்தில், ஒரு வீடு கட்டுவதற்கு 3.50 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டங்களில், 3,551 பயாளிகளுக்கு, மொத்தம் 74.66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, உத்தரவிடப்பட்டுள்ளது.
கனவு இல்லத்தில், சமையலறை உப்பட குறைந்தபட்சம் 360 சதுர அடிக்கு வீடு கட்டலாம்; அதில், 300 சதுர அடி கான்கிரீன் மேற்கூரையால் மூடப்பட்டிருக்கவேண்டும். மீதமுள்ள 60 சதுர அடி கான்கிரீட் அல்லது வேறு வகை கூரையாக இருக்கலாம்.
இவ்வாறு, கிறிஸ்துராஜ் கூறியுள்ளார்.