/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையோர வியாபாரிகளுக்கு பயிற்சியுடன் பாதுகாப்பு 'கிட்' உணவு பாதுகாப்புத்துறை முனைப்பு
/
சாலையோர வியாபாரிகளுக்கு பயிற்சியுடன் பாதுகாப்பு 'கிட்' உணவு பாதுகாப்புத்துறை முனைப்பு
சாலையோர வியாபாரிகளுக்கு பயிற்சியுடன் பாதுகாப்பு 'கிட்' உணவு பாதுகாப்புத்துறை முனைப்பு
சாலையோர வியாபாரிகளுக்கு பயிற்சியுடன் பாதுகாப்பு 'கிட்' உணவு பாதுகாப்புத்துறை முனைப்பு
ADDED : ஆக 01, 2024 01:34 AM

திருப்பூர் : திருப்பூரில் சாலையோர உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ள குறு, சிறு வியாபாரிகளை முறைப்படுத்தும் முயற்சியில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை முனைப்பு காட்டி வருகிறது.
அவ்வகையில், தனியார் நிறுவன பங்களிப்பில் சாலையோர வியாபாரிகள் 500 பேருக்கு, சுகாதாரமான முறையில் உணவுப்பொருள் தயாரித்து விற்பனை செய்வது குறித்து பயிற்சி அளிக்கவும்; உணவு பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையின் போது அணிவதற்கான பாதுகாப்பு உடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான துவக்க விழா, திருப்பூர் ரமணாஸ் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமை வகித்தார். 'நெஸ்லே' நிறுவனப் பிரதிநிதிகள் கார்த்திக், நாராயணன், சாலையோர சிறுகடை வியாபாரிகள் சங்க தேசிய கூட்டமைப்பு செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் தலை கவசம் - 2, தொப்பி, கையுறை, பாதுகாப்பு அங்கி, 3 டவல்; கைகளை சுத்தம் செய்வதற்கு அரைடஜன் சோப் ஆகிய ஆறு பொருட்கள் அடங்கிய 'கிட்' வியாபாரிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது.
'நான் பாதுகாப்பான உணவை அளிக்கிறேன்' என்கிற உறுதிமொழியுடன், உணவு பாதுகாப்பில் கடை பிடிக்கவேண்டிய சுகாதார விதிமுறைகளை விளக்கும் அட்டை வழங்கப்பட்டது. இதனை தங்கள் கடைகளில் கட்டாயம் மக்கள் பார்வைக்கு வைக்க என அறிவுறுத்தப்பட்டது.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை பேசியதாவது:
பாதுகாப்பு 'கிட்' பெற்றுள்ள வியாபாரிகள், உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையின் போது அவற்றை தவறாமல் அணியவேண்டும். உணவு பாதுகாப்பு பயிற்சி பெறும் வியாபாரிகளுக்கு, சான்றிதழ் வழங்கப்படும்.
சாலையோர உணவு வியாபாரிகளின் ஆதார், மொபைல் எண் மற்றும் முழு விவரங்கள் பெறப்பட்டு, உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து, சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழையும், விற்பனை செய்யும் கடைகளில் ஒட்டிவைக்கவேண்டும்.
சாலையோர வியாபாரிகள், நெறிமுறைகளையெல்லாம் கடைபிடிப்பதன்மூலம், மக்களுக்கு பாதுகாப்பான உணவு கிடைப்பது உறுதி செய்யப்படும். திருப்பூர் மாநகராட்சி பகுதி மற்றும் பல்லடத்தில், அடுத்தடுத்து 400 வியாபாரிகளுக்கு பயிற்சி அளித்து, பாதுகாப்பு கிட் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.