/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சஹோதயா எறிபந்து போட்டி சுப்பையா பள்ளி அபாரம்
/
சஹோதயா எறிபந்து போட்டி சுப்பையா பள்ளி அபாரம்
ADDED : செப் 07, 2024 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான எறிபந்து போட்டியில் சுப்பையா சென்ட்ரல் பள்ளி முதலிடம் பிடித்தது.
திருப்பூர் சஹோதயா பள்ளி கூட்டமைப்பு சார்பில், ஆலயா அகாடமி பள்ளியில் மாணவியருக்கான எறிபந்து போட்டி நடைபெற்றது. இதில் 43 பள்ளிகளைச் சேர்ந்த 1500 மாணவியர் பங்கேற்றனர். இதில் த்ரோ பால் போட்டியில் 16 அணிகள் பங்கேற்று விளையாடின.இதில் திருப்பூர் சுப்பையா சென்ட்ரல் பள்ளி மாணவியர் அணி, சிறப்பாக விளையாடி, முதல் பரிசைப் பெற்றது. இந்த அணி மாணவியரை பள்ளி முதல்வர் ஆரோக்கிய ஜெரால்ட், தாளாளர் சுகுமாரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.