/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சகோதயா' நடனப்போட்டி 'ஸ்மார்ட் மாடர்ன்' பிரமாதம்
/
'சகோதயா' நடனப்போட்டி 'ஸ்மார்ட் மாடர்ன்' பிரமாதம்
ADDED : ஆக 25, 2024 01:30 AM

திருப்பூர்:திருப்பூர், அம்மாபாளையம், ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் 'சகோதயா' பள்ளிகள் சார்பில் நடனப்போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி மாணவியர் பங்கேற்றனர். பரத நாட்டிய குழு நடனத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவியர் முதலிடமும், 6, 8ம் வகுப்பு மாணவியர் இரண்டாமிடமும் பிடித்தனர். தனி நபர் நடனப்போட்டியில் 9, 10ம் வகுப்பு மாணவர்கள் இரண்டாமிடம் பிடித்தனர். நாட்டுப்புற நடனத்தில் 6, 8, 9, 10,11, 12 ஆகிய அனைத்து வகுப்பு மாணவர்களும் இரண்டாமிடம் பிடித்தனர். நாட்டுப்புற குழு நடனத்தில் 9, 10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்கள் முதலிடம்; 6, 8-ம் வகுப்பு மாணவர்கள் மூன்றாமிடமும் பெற்றனர்.
வெற்றி பெற்றோரை, பள்ளி அறங்காவலர் நடராஜன் கோப்பைகளை வழங்கி வாழ்த்தினார். பள்ளி முதல்வர் ராஜேந்திர பிரசாத், துணை முதல்வர் பிரேமலதா முன்னிலை வகித்தனர்.