/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்ய திறன் கவுன்சிலில் புதிய இணையதளம் மகாசபை கூட்டத்தில் சக்திவேல் தகவல்
/
தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்ய திறன் கவுன்சிலில் புதிய இணையதளம் மகாசபை கூட்டத்தில் சக்திவேல் தகவல்
தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்ய திறன் கவுன்சிலில் புதிய இணையதளம் மகாசபை கூட்டத்தில் சக்திவேல் தகவல்
தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்ய திறன் கவுன்சிலில் புதிய இணையதளம் மகாசபை கூட்டத்தில் சக்திவேல் தகவல்
ADDED : செப் 07, 2024 11:47 PM

திருப்பூர், : ''தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்ய, திறன் கவுன்சில் வாயிலாக புதிய இணையதளம் உருவாக்கப்படும்,'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் பேசினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின், 34வது பொதுக்குழு மகாசபை கூட்டம், ஐ.கே.எப்., கண்காட்சி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. சங்க தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
நிறுவன தலைவர் சக்திவேல், பொதுசெயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் குமார் துரைசாமி வரவேற்றார்.
ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசியதாவது:
அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளில் சமீபத்திய திருப்பம் நமக்கு சாதகமாக இருக்கிறது; சர்வதேச வணிக சூழல் மாறி, அனைவருக்கும் பிரகாசமான நாட்கள் காத்திருக்கின்றன. பின்னலாடை தொழில் சவாலான காலத்தை வென்று வந்துள்ளது; மீண்டும் திருப்பூர் செழிப்படையும்.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, மறுசுழற்சி தொழில்நுட்பத்தால், 'பசுமை திருப்பூர்' என்ற அங்கீகாரத்தை திருப்பூர் பெறும். திருப்பூரின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில், விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த, மத்திய அரசு முன்வர வேண்டும்; பசுமை சார் உற்பத்தி மற்றும் மறுசுழற்சி ஆடைகளுக்கு, தனி ஏற்றுமதி குறியீடு பெறும் முயற்சியும் தொடரும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அறக்கட்டளை வாயிலாகவும் உதவிகளை வழங்கி வருகிறோம். கடந்த, 2023ம் ஆண்டு முதல், 'டெக்ஸ்டைல் எக்சேஞ்ச்' எனப்படும், சர்வதேச கூட்டமைப்பில், உறுப்பினராக இணைந்துள்ளோம்.
வரும் நவ., மாதம் நடக்கும் மாநாட்டில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர் ஒருவர் உரையாற்ற இருக்கிறார்.
பின்னலாடை தொழில் வளர்ச்சி வாரியம், பி.எல்.ஐ., 2.0 திட்டம், 'ஏ-டப்' திட்டம், பசுமை ஆற்றல் உற்பத்திக்கான மானியம், இறக்குமதி பருத்திக்கான வரி விலக்கு, 45 நாட்களில் கட்டணம் செலுத்தும் சட்டத்தில் திருத்தம், மின் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி., சார்ந்த பிரச்னைகள், திருப்பூர் ஏற்றுமதி மையம் தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
பொதுக்குழு மகாசபையில், ஏற்றுமதி, சுற்றுச்சூழல் சமூக நிர்வாகம், முதல் தலைமுறை இளம் தொழில் முனைவோர் உட்பட, பல்வேறு பகுதிகளில், தங்கம், வெள்ளி, வெண்கலம் என, 36 ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நிறைவாக, இணை செயலாளர் சின்னசாமி நன்றி கூறினார்.
டிஜிட்டல் பாஸ்போர்ட்...
நிறுவன தலைவர் சக்திவேல் பேசியதாவது:
விரைவில், 'டிஜிட்டல் பாஸ்போர்ட்' நடைமுறை, அமலாக்கப்பட உள்ளது. வளம் குன்றா வளர்ச்சி உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும். 'ஆயத்த ஆடை, 'மேட்-அப்ஸ்' வீட்டு அலங்காரம் மற்றும் உற்பத்தி திறன் கவுன்சில் மூலம், 'புளூசைன்' நிறுவனத்துடன் இணைந்த பயிற்சி, வளம் குன்றா வளர்ச்சி நிலையை அடைய உதவியாக இருக்கும்.
தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்ய, புதிய இணையதளம் உருவாக்கப்படும். மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், வர்த்தக சபை உறுப்பினராக, சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் பெயர் பரிந்துரைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.