ADDED : செப் 01, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்னம்பாளையம், மீன்மார்க்கெட்டுக்கு நேற்று, 60 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தன. நேற்று காலை முதலே விற்பனை களைகட்டியது.
கடல் மீன்களை வாங்க வாடிக்கையாளர் போட்டி போட்டனர். வஞ்சிரம் கிலோ, 750 ரூபாயில் இருந்து விலை குறைந்து, 650 ரூபாய்க்கு விற்றது. மத்தி, 120 ரூபாய், பாறை, 140, சங்கரா, 250, ஊழி, 300, இறால், 350, கட்லா, 160, ரோகு, 160, நண்டு, 350 ரூபாய்க்கு விற்றது. மழை காரணமாக, கேரளா மத்தி வரத்து குறைந்தது. அணைகளில் நீர் திறப்பு தொடர்வதால், அணை மீன் வரத்து சற்று குறைந்துள்ளது. ஆடி மாதத்தில் குறைந்திருந்த விற்பனை நேற்று மீண்டதால், வியாபாரிகள் ஆறுதல் அடைந்தனர்.