/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தபால் அலுவலகத்தில் தேசியக்கொடி விற்பனை
/
தபால் அலுவலகத்தில் தேசியக்கொடி விற்பனை
ADDED : ஆக 09, 2024 11:53 PM
திருப்பூர்:திருப்பூர் தபால் கோட்டத்தில் உள்ள, அனைத்து தபால் அலுவலகங்களிலும், தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கொடியின் விலை 25 ரூபாய்.
திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அறிக்கை:நாட்டின், 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூர் தபால் கோட்டத்தில் உள்ள, அனைத்து தபால் அலுவலகங்களிலும், தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கொடியின் விலை ரூ. 25. தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகங்களில், தேசியக்கொடிகளை வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் தேசிய கொடிகள் வாங்க விரும்புவோர், dotirupur.tn@indiapos t.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, தபால்காரர் முலம் வீட்டில் இருந்தபடியேயும் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.