/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புகையிலைப்பொருட்கள் விற்பனை; கடைகளுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
/
புகையிலைப்பொருட்கள் விற்பனை; கடைகளுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
புகையிலைப்பொருட்கள் விற்பனை; கடைகளுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
புகையிலைப்பொருட்கள் விற்பனை; கடைகளுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
ADDED : ஆக 02, 2024 05:22 AM

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள், வெள்ளியங்காடு 60 அடி ரோடு பகுதியில் ஆய்வு நடத்தினர். தடை செய்யப்பட்ட 37.5 கிலோ குட்கா விற்பனைக்காக வைத்திருந்த அய்யப்பன் என்பவரது பெட்டிக்கடையை பூட்டிய அதிகாரிகள், முதல்முறை குற்றத்துக்காக, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கூறியதாவது: கடந்த ஜூலை 22ம் தேதி முதல் 31 ம் தேதி வரையிலான பத்து நாட்களில், திருப்பூர் மாநகராட்சியில் நடத்திய ஆய்வில், தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 45 கடைகள் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன; அந்த கடைகளுக்கு மொத்தம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில், பள்ளி, கல்லுாரி, டாஸ்மாக் மதுக்கடை மற்றும் சுற்றியுள்ள பெட்டிக்கடைகள், மளிகை கடை, பேக்கரிகளில், தொடர்ந்து ஆய்வு நடத்தி, தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தால், 94440 42322 என்கிற எண்ணில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.