/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
/
சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
ADDED : ஜூலை 25, 2024 12:23 AM

உடுமலை கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
உடுமலை அருகே சின்னபொம்மன்சாளையில் உள்ள, செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், சின்னபொம்மன்சாளை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல், உடுமலை தில்லைநகர் ஸ்ரீ சீரடி ஆனந்த சாய் கோவில், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடபெற்றன.
பொள்ளாச்சி: ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், விநாயகப்பெருமானுக்கு ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதுபோன்று, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், விநாயக பெருமானுக்கு சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- நிருபர் குழு -