/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்னுயிர்கள் காக்கும் ரேவதி மருத்துவமனை 30 ஆண்டாக தரமான, விரைவான மருத்துவ சேவை
/
இன்னுயிர்கள் காக்கும் ரேவதி மருத்துவமனை 30 ஆண்டாக தரமான, விரைவான மருத்துவ சேவை
இன்னுயிர்கள் காக்கும் ரேவதி மருத்துவமனை 30 ஆண்டாக தரமான, விரைவான மருத்துவ சேவை
இன்னுயிர்கள் காக்கும் ரேவதி மருத்துவமனை 30 ஆண்டாக தரமான, விரைவான மருத்துவ சேவை
ADDED : ஜூலை 01, 2024 01:43 AM
திருப்பூர் ரேவதி மருத்துவமனை 30 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் மற்றும் சுற்றுப்பகுதியினருக்கு தரமான, விரைவான மருத்துவ சேவை வழங்குவதில் சாதனை படைத்து வருகிறது.
4,500 பேருக்குஇருதய சிகிச்சை
ரேவதி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:
கடந்த ஏழாண்டு முன்னர் வரை, இருதய நோயாளிகள் சிகிச்சைக்காக கோவை, சென்னை என செல்லும் நிலை இருந்தது.
அவர்கள் நலன் கருதி ரேவதி மருத்துவமனையில், இருதய சிகிச்சை வல்லுனர் நாகராஜ் தலைமையில், உலகத் தரம் வாய்ந்த மருத்துவ கருவிகளுடன் இருதய சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. நாகராஜ் மற்றும் பெரியசாமி ஆகியோர் இது வரை 4,500க்கும் மேற்பட்ட இருதய சிகிச்சைகள் செய்துள்ளனர்.
இது வெறும் எண்ணிக்கை மட்டுமில்லை. 4,500 உயிர்கள் அதை நம்பி இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை.அதே போல் மருத்துவர்கள் சந்தோஷ், அருண்குமார் ஆகியோர் பொது மருத்துவம், நீரழிவு, தைராய்டு மற்றும் முதியோர் நலம் பிரிவுகளில் உயர் சிகிச்சை அளிக்கின்றனர்.
இலவச மருத்துவ முகாம்
மகளிர் மற்றும் குழந்தைகள் பிரிவில், கீதாஞ்சலி தலைமையிலான குழுவினர் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சைகளும், பிரசவம், குழந்தைகள் மருத்துவம் வழங்கப்படுகிறது. மூன்று மாதத்துக்கு ஒருமுறை மகளிர்க்கான இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
24 மணி நேர சிகிச்சை
எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று, தண்டுவட அறுவை சிகிச்சைகள் சபரிநாதன் தலைமையில் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவும் செயல்படுகிறது.குணசேகரன், சிவகுமார் ஆகியோர் நரம்பியல் மற்றும் பக்கவாத சிகிச்சைகளை, அதிநவீன கருவிகள், ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளுடன் வழங்குகின்றனர்.
பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் சிகிச்சை பிரிவில், ஹர்ஷா நாராயணன் தலைமையில், புற்று நோய் மற்றும் வயிறு தொடர்பான சிகிச்சைகள் 24 மணி நேரம் வழங்கப்படுகிறது.
பல்வேறு பிரிவுகள்
இ.என்.டி., பிரிவில் தங்க பாத்திமா பேகம் தலைமையில், காது, மூக்கு மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.கிருத்திகா தலைமையில், டயாசிலிஸ், சிறுநீரக பாதிப்புகளுக்கான பிரிவும், பிரியதர்ஷினி தலைமையில் பல் சிகிச்சை மற்றும் தாடை அறுவை சிகிச்சை செயல்படுகிறது.
இங்கு 24 மணி நேரமும் குழந்தைகள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் நலப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இயங்குகிறது.பிரதமர் மருத்துவ காப்பீடு, முதல்வர் காப்பீட்டு திட்ட சிகிச்சையில் சிறந்த சேவைக்கான விருதை பெற்றுள்ளோம்.
மருத்துவர் முதுகலைப் படிப்புக்கு (டி.என்.பி.,) மத்திய அரசு அனுமதி பெறப்பட்டுள்ளது. சலுகை கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.இது தவிர, அழகியல் சிகிச்சை, மனநலம், குடி போதைக்கான சிகிச்சை உள்ளிட்ட பல மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.
ரேவதி அறக்கட்டளை சார்பில் மாதம் தோறும் 20 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.அவிநாசியில் நர்சிங், பிசியோதெரபி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படுகிறது. தொடர்ந்து 3 ஆண்டாக தேசிய தரச் சான்று பெற்றுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரேவதி அறக்கட்டளை சார்பில் மாதம்
தோறும் 20 மருத்துவ முகாம்கள் நடத்தப்
படுகிறது. அவிநாசியில் நர்சிங், பிசியோ
தெரபி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள்
செயல்படுகிறது. தொடர்ந்து 3 ஆண்டாக தேசிய தரச் சான்று பெற்றுள்ளோம்.