/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி ஆண்டு விழா குட்டீஸ் குதுாகலம்
/
பள்ளி ஆண்டு விழா குட்டீஸ் குதுாகலம்
ADDED : செப் 01, 2024 01:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர், பி.என்., ரோடு, அண்ணாநகர், ஜே.பி., நகர், முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 15ம் ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், மூன்றாவது வார்டு கவுன்சிலர் லோகநாயகி, திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
கடந்த, 2023 - 2024 ம் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், முதல் மதிப்பெண், நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், சிறப்பாக பணியாற்றி ஆசிரியர்களுக்கு மேயர் தினேஷ்குமார், விருது வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.