ADDED : ஆக 03, 2024 06:29 AM

திருப்பூர்: 'மாணவ, மாணவியர், ஒழுக்க நெறியுள்ளவர்களாக வளர்வதில், பெற்றோரின் பங்களிப்பு அவசியம்' என ஆலோசனைக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.திருப்பூர் மாநகராட்சி, 42வது வார்டுக்குட்பட்ட கே.வி.ஆர்., நகர், செல்லம் நகர், பாரப்பாளையம் மாநகராட்சி துவக்க, உயர்நிலை பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.பள்ளிக்கல்வி குழு தலைவரும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருமான அன்பகம் திருப்பதி பேசுகையில், ''பள்ளி மேலாண்மைக்குழு தேர்தல் நடத்தப்பட்டு, 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், புதிதாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்; வரும், 24ம் தேதி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. பள்ளி வளர்ச்சியில் அக்கறை கொண்ட பெற்றோர், உறுப்பினராக இணைய முன்வர வேண்டும்'' என்றார்.
பள்ளி தலைமையாசிரியர்கள் அருணா (பாரப்பாளையம்), விஜயலட்சுமி (கே.வி.ஆர்., நகர்), பத்மா (செல்லம் நகர்), பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் கோவிந்தராஜன், மருதயப்பன், கிருஷ்ணமூர்த்தி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ஓதியப்பன், சேகர், சதீஷ், சுமித்ரா, பாஸ்கர் மற்றும் பெற்றோர் பலரும் பங்கேற்றனர்.