/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்கள் பெற்றோருக்கு பாதபூஜை
/
பள்ளி மாணவர்கள் பெற்றோருக்கு பாதபூஜை
ADDED : பிப் 10, 2025 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பெற்றோருக்கு பாதபூஜை செய்தனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு, பள்ளியின் சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் இந்த வழிபாட்டில் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாணவர்கள் பெற்றோருக்கு பாதபூஜை செய்து, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.
விழாவில் பள்ளி தாளாளர் ஜூலியா, பள்ளி முதல்வர் மஞ்சுளாதேவி, பள்ளி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.