ADDED : மார் 02, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை,; உடுமலையில், அறிவியல் இயக்கம் சார்பில், அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
மாநில அறிவியல் இயக்கம், உடுமலை கிளை சார்பில், 'அஞ்சல் அட்டையில் அறிவியல் தினம்' என்ற தலைப்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. இதில், நான்கு அரசு பள்ளிகளிலிருந்து, நுாறு மாணவர்கள் அஞ்சல் அட்டைகளில் ராமன் விளைவு என்ற தலைப்பில் ஓவியங்களை வரைந்தனர்.
தொடர்ந்து, பார்த்தசாரதிபுரம் ஒன்றிய பள்ளியில், சர்.சி.வி.ராமன் 'துளிர் இல்லம்' துவங்கப்பட்டது. உடுமலை கிளை தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஈஸ்வரசாமி, ஆசிரியர் சந்திரசேகர், துளிர் இல்ல செயலாளர் கிரிஜா, ஒருங்கிணைப்பாளர் வசந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 21 மாணவர்கள் துளிர் இல்லத்தில் இணைந்து கொண்டனர்.