தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அறிவியல் பாடப்பிரிவு இறுதிக்கட்ட கவுன்சிலிங்

அறிவியல் பாடப்பிரிவு இறுதிக்கட்ட கவுன்சிலிங்

அறிவியல் பாடப்பிரிவு இறுதிக்கட்ட கவுன்சிலிங்


ADDED : ஆக 05, 2026 08:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 08:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர், ஆக. 6–

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க, பிளஸ் 2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விலங்கியல் பிரிவில் ஒரு இடம், இயற்பியலில் 13, வேதியியலில் 17, கணிதத்தில் 29 இடங்கள் காலியாக உள்ளன. பிளஸ் 2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இதுவரை கல்லுாரிக் கல்வி இயக்கக இணையதளம் மூலம் விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் விண்ணப்பித்து கலந்தாய்வில் பங்கேற்காதவர்கள் இதில் பங்கேற்கலாம்.

கலந்தாய்வில் பங்கேற்போர், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் நகல், பாஸ்போர்ட் அளவு 6 புகைப்படங்கள் மற்றும் கல்லுாரிக் கட்டணத் தொகையுடன் வர வேண்டும் என கல்லுாரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us