sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போக்குவரத்து சிக்னல்களில் நிழல் தரும் பந்தல் அமைப்பு

/

போக்குவரத்து சிக்னல்களில் நிழல் தரும் பந்தல் அமைப்பு

போக்குவரத்து சிக்னல்களில் நிழல் தரும் பந்தல் அமைப்பு

போக்குவரத்து சிக்னல்களில் நிழல் தரும் பந்தல் அமைப்பு


ADDED : மே 04, 2024 12:10 AM

Google News

ADDED : மே 04, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் நகரப் பகுதி போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வசதிக்காக நிழல் தரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

அனல் பறக்கும் வெயில் காரணமாக பிற்பகல் நேரங்களில் பெரும்பாலான ரோடுகளில் மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து கூட பெருமளவு குறைந்து போய்க் காணப்படுகிறது.

பாதசாரிகள், இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் தங்கள் பயணத்தின் போது எங்காவது நிழல் கிடைத்தால் சிறிது நேரம் நின்று ஓய்வெடுத்து அதன் பின் தங்கள் பயணத்தை தொடரும் நிலை உள்ளது.நகரில் உள்ள பெரும்பாலான ரோடுகளில் ரோட்டின் மோசமான நிலை காரணமாக மெதுவாகவும், கவனமாகவும் கடந்து செல்ல வேண்டிய நிலை, கோடை வெப்பத்துடன் சேர்ந்து வாகன ஓட்டிகளை மேலும் அவதிக்குள்ளாக்கியது.

அதே போல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் முக்கிய ரோடுகளில் கடந்து செல்லும் போதும், போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் போதும் வாகன ஓட்டிகள் அனலில் விழுந்த புழுபோல் தவித்தும், தகித்தும் போய் சோர்ந்து விடுகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் விதமாக போக்குவரத்து சிக்னல்களில் வாகனங்கள் காத்திருக்கும் பகுதியில் நிழல் தரும் வகையில் பந்தல் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மாநகர போக்குவரத்து போலீசார் அளித்த ஆலோசனைகளின் பேரில், இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. முதல் கட்டமாக, மாநகராட்சி சந்திப்பு சிக்னல் பகுதியில், ஈஸ்வரன் கோவில் வீதியில் வரும் வாகனங்கள் சிக்னலில் காத்திருக்கும் பகுதியில் நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுமானம் நடக்கும் இடங்கள் மற்றும் நர்சரிகளில் பயன்படுத்தும் பச்சை நிறத்திலான வலை வடிவ துணி கொண்டு இங்கு பந்தல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. கனரக சரக்கு வாகனங்கள் சிரமமின்றி கடந்து செல்லும் வகையில் உயரமாக இது அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கூறியதாவது:போக்குவரத்து போலீசாருடன் நடத்திய ஆலோசனையின் பேரில், நகரப் பகுதியில் 8 சிக்னல் பகுதிகளில் இது போல் நிழல் பந்தல் அமைக்கப்படவுள்ளது. பல்லடம் ரோடு, அவிநாசி ரோடு, பி.என்., ரோடு ஆகிய பகுதியில் இது அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us