தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தள்ளாடும் கடைகள்!

தள்ளாடும் கடைகள்!

தள்ளாடும் கடைகள்!


ADDED : ஜூலை 03, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 05:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகராட்சியின் வணிக வளாகங்களில்...  பராமரிப்பில் அலட்சியத்தால் அச்சம்

உடுமலை: நீண்ட காலமாக பயன்பாட்டில் இருக்கும் நகராட்சி வணிக வளாக கடைகள், போதிய பராமரிப்பு இல்லாமல், கான்கிரீட் பூச்சு உதிர்ந்து, அங்கு செல்லும் மக்களை அச்சுறுத்தும் நிலையில் உள்ளன; அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அனைத்து கடைகளையும் புதுப்பிக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை நகராட்சியின் வருவாயை அதிகரிக்கவும், சிறு, குறு தொழில் முனைவோர் பயன்பெறவும், பல்வேறு திட்டங்களின் கீழ், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

அவ்வகையில், நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள வளாகம், 1983ல் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதாகும். இந்த வளாகத்தில், இரு அடுக்குகளில் 60க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

கீழ்தளத்திலுள்ள கடைகளில், ரேஷன் கடை உள்ளிட்ட கடைகள் செயல்படுவதால், மக்கள் அதிகம் வந்து  செல்கின்றனர். அங்குள்ள கடைகள் நீண்ட காலமாக போதிய பராமரிப்பு இல்லாமல், தற்போது அச்சுறுத்தும் நிலையில் உள்ளன.

கடந்தாண்டு, வளாகத்துக்கு செல்லும் வழித்தடத்தை ஒட்டி, கடையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேல்தளத்திலுள்ள பெரும்பாலான கடைகள் பயன்படுத்த முடியாத நிலையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

படிப்படியாக இந்த வளாகம் முற்றிலுமாக பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகிறது. இதே போல், குட்டைத்திடல் அருகிலுள்ள வளாகத்திலுள்ள கடைகளின் மேற்கூரையும் சேதமடைந்து, கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது.

கல்பனா ரோடு வளாகத்திலும் இதே நிலையே காணப்படுகிறது. நகராட்சி வணிக வளாகம் என்றாலே, மக்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

கடந்த, 2015ல் வணிக வளாக கடைகளின் ஏலத்தொகை உயர்த்தப்பட்டு, நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், கடைகள் பராமரிப்பில் நகராட்சி நிர்வாகம் தற்போது வரை அலட்சிய போக்கையே காட்டி வருகிறது. அனைத்து வணிக வளாகங்களையும் புதுப்பிக்க வேண்டும் என கவுன்சிலர்கள் தரப்பிலும் பல முறை நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறித்த நேரத்தில், வாடகை உள்ளிட்ட வரியினங்களை செலுத்தினாலும், பராமரிப்பில் காட்டப்படும் அலட்சியம் சிறு, குறு தொழில் முனைவோரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

அவர்கள் கூறுகையில், ‘நகராட்சி வணிக வளாகத்திலுள்ள கடைகளில் பாதுகாப்பின்றி தொழில் செய்ய வேண்டியுள்ளது. இடிந்து விழும் கூரையால், மக்களும் வருவதற்கு அச்சப்படுகின்றனர். வாடகைத்தொகை மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால், கடைகளை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்,’ என்றனர்.

காற்று வாங்குகிறது

உடுமலை பஸ் ஸ்டாண்டில், நகராட்சிக்குரிய கடைகளை பெற முன்பு போட்டி நிலவும். தற்போது பெரும்பாலான கடைகளை ஏலம் எடுக்க ஆளில்லாமல், அவை நிரந்தரமாக பூட்டப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், கடைகளுக்கான வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. அதன்பிறகு, அரசு வழிகாட்டுதல்படி குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் வாடகை உயர்த்தப்படுகிறது. போதிய வசதி இல்லாமல், கூடுதல் வாடகை கொடுத்து தொழில் செய்ய முடியாது என பலர் கடைகளை காலி செய்து விட்டனர். அவ்வளாகத்தில் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டு, அவை சமூகவிரோதிகள் மையமாக மாறி விட்டது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us