/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெரு நாய்கள் உருவாவதை தடுக்க காப்பகம் தேவை
/
தெரு நாய்கள் உருவாவதை தடுக்க காப்பகம் தேவை
ADDED : செப் 07, 2024 12:06 AM
பொங்கலுார்:சமீப காலங்களில் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் தெரு நாய்கள் விவசாயிகள் வளர்க்கும் ஆடுகளை கடித்து குதறி வருகின்றன. இதனால், பல விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. நகர் பகுதியில் மனிதர்களை கடிக்கும் செயல்களும் ஆங்காங்கே நடக்கின்றன.
இதற்கு மனித தவறுகளே மிக முக்கிய காரணம். மனிதர்கள் ஓர் இடத்தில் நிலையாக வாழ்வதில்லை. தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தன் தேவைக்காக நாய்களை வளர்க்கின்றனர். வேறு ஊருக்கு குடிபுகும்போதும், வீட்டு உரிமையாளர் இறக்கும் பொழுதும் நாய்கள் அனாதையாகின்றன. அதுவரை நன்றாக சாப்பிட்டு வந்த நாய்கள் விரட்டி அடிக்கப்படும் போது அவற்றின் இயல்பு மாறி விடுகிறது.
கிராம பகுதிகளில் கறிக்கோழி பண்ணைகள் அதிகரித்த பின் இறந்த கோழிகளை துாக்கி எறிவது அதிகரித்துள்ளது. அவற்றை சாப்பிட்டு பழகிய நாய்கள் அவை கிடைக்காதபோது ஆடுகளை இரையாக்கி விடுகிறது. இதனால் விவசாயிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரி போராடுகின்றனர்.
இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். நாய்களை வளர்க்க விருப்பம் இல்லாதவர்கள் தங்கள் நாய்களை அரசிடம் ஒப்படைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.. கண்ட இடங்களில் மாமிச கழிவுகளை துாக்கி எறியாமல் குழி தோண்டி புதைக்க வேண்டும். மீறுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.