/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எங்கும் எதிலும் சிவமே! சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
/
எங்கும் எதிலும் சிவமே! சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
எங்கும் எதிலும் சிவமே! சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
எங்கும் எதிலும் சிவமே! சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
ADDED : ஜூன் 20, 2024 05:04 AM

திருப்பூர், : திருப்பூர் பகுதி சிவாலயங்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மாலை 4:00 மணி முதல், மூலவர், அதிகார நந்தி மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு அபிேஷகம் நடைபெற்றது. அலங்கார பூஜைகள் நடந்தன. ஸ்ரீஉமாமகேஸ்வரர், வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, வெளிபிரகாரத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பக்தர்கள், 'சிவாய நம' கோஷத்துடன் வலம் வந்து வழிபட்டனர்; தொடர்ந்து, பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல், அலகுமலை கைலாசநாதர் கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், அவிநாசி, நாராசா வீதி காசி விஸ்வநாதர் கோவில்.
சேவூர் வாலீஸ்வர சுவாமி கோவில், பழங்கரை பொன்சோழீஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில், அலகுமலை ஆதி கைலாசநாதர் கோவில், எஸ்.வி., காலனி,நீலகண்டேஸ்வரர் கோவில், லட்சுமி நகர் அருணாச்சலேஸ்வரர் கோவில், ஊத்துக்குளி ரோடு காசி விஸ்வநாதர் கோவில், சித்தம்பலம் நவக்கிரஹ கோட்டைகோவில் ஆகிய சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.