/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறந்த வெளியில் சடலம் ;சுடுகாட்டில் அதிர்ச்சி
/
திறந்த வெளியில் சடலம் ;சுடுகாட்டில் அதிர்ச்சி
ADDED : மே 06, 2024 11:26 PM
பல்லடம்:மாணிக்காபுரம் ரோடு, சி.எம்., நகரை சேர்ந்த ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து, அவரது உடலை புதைக்க வேண்டி, உறவினர்கள், நேற்று காலை பல்லடம் பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள சுடுகாட்டுக்கு வந்தனர். அங்கு, திறந்தவெளியில் சடலம் ஒன்று கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
இன்று (நேற்று) காலை, சடலத்தை புதைக்க வந்தபோது, துர்நாற்றம் வீசியது. உள்ளே சென்று பார்த்த போது திறந்தவெளியில் சடலம் ஒன்று கிடந்தது. வேலை பார்ப்பவரிடம் கேட்டதற்கு, 20 நாளாக இப்படித்தான் கிடக்கிறது என்றும், ஏற்கனவே சடலத்தை புதைக்க வந்தவர்கள், கீழே இருந்து இந்த சடலத்தை மேலே போட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார். இது கவலை அளிக்கிறது,' என்றனர்.
தகலறிந்து விசாரித்த பல்லடம் போலீசார், அது பழைய சடலம் தான் என்பதை உறுதி செய்த பின் அதனை புதைக்குமாறு அறிவுறுத்தி சென்றனர். இதனால், சுடுகாட்டில் பரபரப்பு நிலவியது.