/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துப்பாக்கி சுடுதல் போட்டிகுமுதா பள்ளி மாணவி தேர்வு
/
துப்பாக்கி சுடுதல் போட்டிகுமுதா பள்ளி மாணவி தேர்வு
துப்பாக்கி சுடுதல் போட்டிகுமுதா பள்ளி மாணவி தேர்வு
துப்பாக்கி சுடுதல் போட்டிகுமுதா பள்ளி மாணவி தேர்வு
ADDED : ஆக 03, 2024 06:35 AM

திருப்பூர்: தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் கழகத்தின் சார்பில், 47வது துப்பாக்கி சுடுதல் போட்டி, கோவை, காவல்துறை பயிற்சி வளாகத்தில் சமீபத்தில் நடந்தது.
மாநிலம் முழுக்க இருந்தும், ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.பதினான்கு வயதுக்குட்பட்ட பெண்கள் தனிநபர் பிரிவில், குமுதா பள்ளியில் பயிலும், 10ம் வகுப்பு மாணவி ரிதன்யா, 400க்கு 328 புள்ளிகள் பெற்று, வெற்றி பெற்று, அடுத்த மாதம் சென்னையில் நடக்க இருக்கும் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
குமுதா பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் டாக்டர் அரவிந்தன், இணை செயலாளர் டாக்டர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர் மற்றும் சக மாணவ, மாணவியர், ரிதன்யாவை பாராட்டினர்.