/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய கேரம்: மாணவர்கள் அபாரம்
/
குறுமைய கேரம்: மாணவர்கள் அபாரம்
ADDED : ஆக 06, 2024 06:50 AM

திருப்பூர்: திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு குறுமைய கேரம் போட்டியில் மாணவ, மாணவியர் தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.
திருப்பூர் வடக்கு குறுமைய கேரம் போட்டி, 15 வேலம்பாளையம், ஜெய் சாரதா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.
பள்ளி அறக்கட்டளை செயலாளர் கீர்த்திவாணி போட்டிகளை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் மணிமலர் முன்னிலை வகித்தார்.
பதினான்கு வயது மாணவர் பிரிவில், 24 அணி, மாணவியர் பிரிவில், 23, 17 வயது மாணவர் பிரிவில், 24, மாணவியரில், 18, பத்தொன்பது வயது மாணவர் பிரிவில், 15, மாணவியர் பிரிவில், 14 அணிகளும் பங்கேற்று விளையாடின.
குறுமைய கண்காணப்பு குழு உறுப்பினர்கள் இளங்கோவன், ஜெரால்ட், பாலகிருஷ்ணன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
ஒற்றையர், இரட்டையர் பிரிவுக்கு 'நாக்-அவுட்' முறையில் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
தெற்கு குறுமையம்
திருப்பூர் தெற்கு குறுமையத்துக்கான போட்டியை, பெருந்தொழுவு, அரசு மேல்நிலைப்பள்ளி நடப்பாண்டு நடத்துகிறது. இடப்பற்றாக்குறை காரணமாக, முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லுாரியில் குறுமைய கேரம் போட்டி நேற்று நடத்தப்பட்டது.
கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் போட்டிகளை துவக்கி வைத்தார். குறுமைய இணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
மாணவர் மற்றும் மாணவியருக்கான போட்டியில், மொத்தம், 14 அணிகள் பங்கேற்று விளையாடின. இளையோர், மூத்தோர், மிக முத்தோர் என மூன்று பிரிவுகளாக ஒற்றையர் மற்றும் இரட்டையர் (அணிக்கான) போட்டிகள் நடத்தப்பட்டது.