/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய டென்னிஸ் போட்டி; வென்றவர்களுக்கு பாராட்டு
/
குறுமைய டென்னிஸ் போட்டி; வென்றவர்களுக்கு பாராட்டு
ADDED : ஆக 06, 2024 10:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : பள்ளிக்கல்வித்துறை சார்பில், நடப்பு கல்வியாண்டிற்கான உடுமலை குறுமைய அளவிலான டென்னிஸ் போட்டிகள் மனமகிழ் மன்ற மைதானத்தில் நடந்தது.
உடுமலை பகுதியைச்சேர்ந்த, 12க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவ, மாணவியர் பங்கேற்று, ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் விளையாடினர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, உடுமலை மனமகிழ் மன்ற தலைவர் சிதம்பரசாமி, செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் மனோகரன் மற்றும் மன்ற நிர்வாகிகள் வழங்கினர்.
குறுமைய போட்டியில் வெற்றி பெற்று, அடுத்த கட்ட போட்டிக்கு தேர்வு பெற்ற, டென்னிஸ் வீரர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் தரப்பிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.