/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காட்சிப்பொருளான சுகாதார கழிப்பிடம்
/
காட்சிப்பொருளான சுகாதார கழிப்பிடம்
ADDED : செப் 16, 2024 12:17 AM

அனுப்பர்பாளையம் : பெருமாநல்லுார் ஊராட்சி, பொடாரம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக மத்திய அரசு நிதி மூலம் 2022 -- 2023ம் ஆண்டு ஒரு லட்சத்து, 81 ஆயிரம் 500 ரூபாய் மதிப்பில் பொது சுகாதார கழிப்பிடம் கட்டப்பட்டது. பணி முடிந்து ஒன்றரை ஆண்டாகியும் பயன்பாட்டுக்க வரவில்லை.
பொதுமக்கள் கூறுகையில், ''பலரும் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலையில் உள்ளோம்'' என்றனர்.
ஊராட்சி தலைவர் சாந்தாமணி கூறுகையில், ''கட்டப்பட்டுள்ள கழிப்பறை ஒரே நேரத்தில் இரண்டு பேர்தான் பயன்படுத்த முடியும்; கூடுதல் கழிப்பறை கட்ட நிதி கேட்டுள்ளோம். கூடுதல் கழிப்பறை கட்டியபின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்'' என்றார்.

