ADDED : ஆக 03, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்: சதுரகிரி மலையேறும்போது மாரடைப்பு ஏற்பட்டு திருப்பூரில் பணிபுரிந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பலியானார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 56. திருப்பூர், அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். மனைவி, 2 மகன்கள் உள்ளனர். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மதுரை மாவட்டம், சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றார். பசுக்கிடை என்ற இடத்தில் சென்றபோது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உறவினர்கள் டோலி மூலம் மலை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து போனதாக தெரிவித்தனர். சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.